முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினி, தோனி, விஜய், கோலி..! டிவிட்டர் ‘புளு-டிக்’ அங்கீகாரத்தை நீக்கிய எலான் மஸ்க்.!

Default Image

டிவிட்டர் சந்தா செலுத்தாத காரணத்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய், தோனி , விராட் கோலி என பல பிரபலங்களின் ப்ளூ டிக் அங்கீகாரத்தை டிவிட்டர்  நீக்கியுள்ளது. 

ஸ்மார்ட்போன்வாசிகள் மத்தியல் மிகவும் பிரபலமாக இயங்கி வரும் சமூகவலைத்தள செயலிகளில் ஒன்று டிவிட்டர். இந்த டிவிட்டர் செயலியை உலக பணக்காரர்களில் மிக முக்கிய நபரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து அதிரவைத்து வருகிறார்.

டிவிட்டர் புளு -டிக் :

முன்னதாக ஒரு விளையாட்டு / சினிமா / அரசியல் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கு அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு இலவசமாக புளு டிக் எனப்படும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த புளூ டிக்கை கட்டணம் என அறிவித்து, யார் வேண்டுமானாலும் மாத தவணை செலுத்தி அடையாளங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து சிலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தது.

மு.க.ஸ்டாலின் – ராகுல்காந்தி :

இந்நிலையில், மாதத்தவனை கட்டணம் செலுத்தாதவர்கள் மிக பெரிய பிரபலமாக இருந்தாலும் அவர்களின் புளூ டிக்கை எலான் மஸ்க் நீக்கிவிட்டார். அப்படி தான் தற்போது இந்திய பிரபலங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருந்து புளூ டிக் நீக்கப்பட்டுள்ளது, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களின் டிவிட்டர் பக்க ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

தோனி முதல் விஜய் வரை :

கிரிக்கெட் வீரர்கள் மகிந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா,  ரொனால்டோ ,   நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ்,  நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலரது டிவிட்டர் கணக்குகளில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களை பாலோ செய்யும் பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உண்மையிலேயே இவர்கள் சந்தா செலுத்தாதன் காரணமாக நீக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்