இனி ட்டுவிட்டரிலும் வாய்ஸ் டுவிட்…குஷியில் டுட்விட் வாசிகள்
டுவிட்டர் நிறுவனம் வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடிகிறது.ஆனால் டுவிட்டரில் வாய்ஸ் பதிவுகளை இடமுடியாத சூழ்நிலை இருந்தது.ஆனால் தற்போது, ‘ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கும் வசதி விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வரவுள்ளது.
டுவிட்டரில் இடப்படும் வாய்ஸ் மெசேஜ்களுக்கு கேப்ஷன் கொடுக்கும் ஆப்ஷனும் விரைவில் வெளியாக உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ட்விட்டர்இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், வாய்ஸ் டுவீட்கள் இடுவதில் சில சிக்கல்களும் நிறைய இருக்கின்றன.சிலர் இந்த வசதியை கொண்டு ஆபாசமான வார்த்தைகளில் டுவிட்களைப் பதிவிடவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த புதிய அப்டேட் பயனர் இடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.