அமித்ஷாவின் டி.பி-யை முடக்கிய ட்வீட்டர்! காரணம் என்ன?
ட்வீட்டரில் முடக்கி வைக்கப்பட்ட அமித்ஷாவின் சுயவிவர படம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, ட்வீட்டரில் அதிகமான ஃபாலொவெர்சை கொண்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவரை, 23.6 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். இந்நிலையில், இவரது ட்வீட்டர் பக்கத்தில், சில நிமிடங்கள் இவரது சுய விவர படம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, ‘media not displayed’ என தோன்றியது. இதுகுறித்து, ட்வீட்டர் தரப்பில், புகைப்படம் பதிப்புரிமை விவகாரம் தொடர்பான ஒரு அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் படம் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, உரிய பதில் கிடைத்ததையடுத்து, அவரது புகைப்படம் மீண்டும் மீள்பதிவேற்றம் செய்யப்பட்டது.