கங்கனா ரனாவத்தின் ட்வீட்டை நீக்கிய ட்வீட்டர் நிறுவனம்…!
கங்கனாவின் சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் கடந்த சில மணி நேரங்களில் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விட்டு இருந்து ட்வீட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணி பெரும் சர்ச்சைக்குரிய சம்பவமாக முடிந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சில பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகள் குறித்து, கங்கனா ரனவத் விவசாயிகளை எதிர்ப்பாளர்கள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில்,இதற்க்கு கருத்து தெரிவித்திருந்த பாப் பாடகி ரிஹானாவை முட்டாள் என்றும் அழைத்துள்ளார்.
இதனையடுத்து கங்கனாவின் சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் கடந்த சில மணி நேரங்களில் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விட்டு இருந்து ட்வீட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து ட்வீட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வரம்பு அமலாக்க விருப்பங்களுக்கு ஏற்ப ட்விட்டர் விதிமுறைகளை மீறும் ட்வீட்டுகளில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.