டிஎம்சி கட்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது..!
டிஎம்சி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. டிஎம்சி ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டதோடு அந்த கணக்கின் பெயர் மற்றும் சுயவிவரப்படம் (ப்ரொபைல் பிக்சர்) மாற்றப்பட்டுள்ளது. கணக்கு ஹேக் செய்யப்பட்டதை டிஎம்சி தலைவர் டெரெக் ஓ பிரையன் (Derek O’Brien) உறுதிப்படுத்தியதோடு ட்விட்டரின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார்.
இதுவரை கட்சியின் கணக்கிலிருந்து எந்த இடுகைகளையும் ட்வீட் செய்யவில்லை என்றும் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். கட்சியின் ட்விட்டர் கணக்கின் சுயவிவரப்படம் கருப்பு நிறத்தில் ‘Y’ வடிவ லோகோவும், கணக்கின் பெயர் “யுகா லேப்ஸ்” என்றும் மாற்றப்பட்டுள்ளது.
யுகா லேப்ஸ் என்பது என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு பிளாக்செயின் தொழில்நுட்ப நிறுவனமாகும். 2021 இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் புளோரிடாவின் மியாமியில் அமைந்துள்ளது. இது என்எப்டி (Non-fungible tokens), கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் மீடியா துறைகளில் நிபுணத்துவம் பெற்றது.