மீண்டும் திருப்பம் ! பாஜகவிற்கு ஆதரவு கிடையாது – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவிப்பு
பாஜகவிற்கு ஆதரவு கிடையாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று மகாராஷ்டிராவில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றனர்.
கடந்த சில நாட்களாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இன்று திடீரென பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் சட்டப்பேரவை குழுத் தலைவர் அஜித்பவார் பதவியேற்றார்.
இந்த நிலையில் இந்த திடீர் ஆட்சி குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது என்பது அஜித்பவாரின் சொந்த முடிவு ஆகும் .தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல. பாஜக – அஜித்பவார் கூட்டணியை தேசியவாத காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.