கேரளாவில் நிதி நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரட்டையர்கள்.
கேரள மாநிலம், கடுவாக்குளம் அருகே இடுங்கடி புதுபரம்பில் அப்துல் சலாமின் மகன்களான நிசார் ஹான் மற்றும் நசீர் ஆகிய இரட்டையர்கள் தங்களது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது தாய் பாத்திமா தனது மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு, உள்ளூர் வாசிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து, உள்ளூர் வாசிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இரட்டையர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு வருடத்திற்கு முன்பாக இவர்களது வேலை பறிபோனது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் கோட்டயம் நகர கூட்டுறவு வங்கியில் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பணம் செலுத்தப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பதாக வங்கியில் இருந்து கடனை திருப்பித் தருமாறு அவர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அவர்கள் பாலக்காட்டில் உள்ள தங்கையின் சொத்தை விற்ற பின் கடனை திருப்பித் தருவதாக வங்கியில் இருவரும் பதிலளித்தனர். இருப்பினும் மன வேதனை தாங்க இயலாத நிலையில் சகோதரர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…