உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்த இரட்டையர்கள்!

Published by
Rebekal

கொரோனா தொற்று காரணமாக உத்திரபிரதேசத்தில் உள்ள இரட்டையர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாட்டில் தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அரசியல்வாதிகள், பிரபலங்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனா மிக தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜோஃப்ரெட் மற்றும் ரால்பிரெட் ஆகிய இரட்டை சகோதரர்கள் இருவருக்குமே கடந்த சில தினங்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இருவருக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் மருத்துவமனையிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோஃப்ரெட் நிலைமை மிகவும் மோசம் அடைய தொடங்கியுள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் உயிர்வாழ்ந்த ஜோஃப்ரெட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது இரட்டை சகோதரர்கள் ரால்பிரட்டும் அதே மருத்துவமனையில் உடல் நிலை மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும் அவரது சகோதரர் இறந்ததும் அவருக்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால் அவரது பெற்றோர்கள் ரால்பிரட்  உயிர் பிழைத்து வருவான் என நம்பி உள்ளனர். இருப்பினும் ரால்பிரெட் ஏன் நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள் எனது சகோதரன் எப்படி இருக்கிறான் என்று கேட்கும் போதெல்லாம் அவரது பெற்றோர்கள் உண்மையை மறைத்து வந்துள்ளனர். ஆனால் அன்றைய தினம் அவரது சகோதரர் ஜோஃப்ரெட் இறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ரால்பிரெட்டும் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்பமே மிகுந்த சோகத்தில் காணப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள அவரது தந்தை எனது மகன்கள் ஆண்களாக இருந்தாலும், எனக்கு கால் வலிக்கிறது என்று சொன்னால் உடனே எனது காலை அமுக்கி விடுவார்கள். வீட்டில் சமையல் வேலை பார்பார்கள் ஆனால் அவர்கள் தற்போது எங்களுடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ரசிகர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்…

ரசிகர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்…

துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…

43 minutes ago

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…

1 hour ago

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

3 hours ago

“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…

3 hours ago

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  “நீட் தேர்வை…

4 hours ago