உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்த இரட்டையர்கள்!

கொரோனா தொற்று காரணமாக உத்திரபிரதேசத்தில் உள்ள இரட்டையர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாட்டில் தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அரசியல்வாதிகள், பிரபலங்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனா மிக தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜோஃப்ரெட் மற்றும் ரால்பிரெட் ஆகிய இரட்டை சகோதரர்கள் இருவருக்குமே கடந்த சில தினங்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இருவருக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் மருத்துவமனையிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோஃப்ரெட் நிலைமை மிகவும் மோசம் அடைய தொடங்கியுள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் உயிர்வாழ்ந்த ஜோஃப்ரெட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது இரட்டை சகோதரர்கள் ரால்பிரட்டும் அதே மருத்துவமனையில் உடல் நிலை மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் அவரது சகோதரர் இறந்ததும் அவருக்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால் அவரது பெற்றோர்கள் ரால்பிரட் உயிர் பிழைத்து வருவான் என நம்பி உள்ளனர். இருப்பினும் ரால்பிரெட் ஏன் நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள் எனது சகோதரன் எப்படி இருக்கிறான் என்று கேட்கும் போதெல்லாம் அவரது பெற்றோர்கள் உண்மையை மறைத்து வந்துள்ளனர். ஆனால் அன்றைய தினம் அவரது சகோதரர் ஜோஃப்ரெட் இறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ரால்பிரெட்டும் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்பமே மிகுந்த சோகத்தில் காணப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள அவரது தந்தை எனது மகன்கள் ஆண்களாக இருந்தாலும், எனக்கு கால் வலிக்கிறது என்று சொன்னால் உடனே எனது காலை அமுக்கி விடுவார்கள். வீட்டில் சமையல் வேலை பார்பார்கள் ஆனால் அவர்கள் தற்போது எங்களுடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025