ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்..?
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட தேர்தலின் போது 3 தொலைக்காட்சி பத்திரிக்கையாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் பலர் சென்று அங்கு நடந்த தகவல்களை சேமித்து உள்ளனர். அப்பொழுது செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த 3 பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தாக்கியதாகவும், செய்திகளை சேகரிக்க கூடாது என தடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பத்திரிகை நிருபர்களின் உபகரணங்கள் அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேசிய மாநாட்டு வேட்பாளர் ஒருவர் வாக்களிக்க அனுமதிக்கப்படாததால் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே மூத்த போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியை சந்தித்து அணுகியதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின் பத்திரிக்கையாளர்கள் சூப்பிரண்டு அதிகாரியிடம் இதுகுறித்து கருத்து கேட்டதாகவும், பத்திரிக்கையாளர்கள் மூவரையும் தாக்கியதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீர் பிரஸ் கிளப் தற்பொழுது கண்டனம் எழுப்பியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.