தடுப்பூசி போட்டால் டிவி, ப்ரிட்ஜ் பரிசா…! எங்கு தெரியுமா…?
மகாராஷ்டிராவில் உள்ள சந்திராபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பம்பர் அதிர்ஷ்டக் குலுக்கல்லை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் வித்தியாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது தடுப்பூசி போட கூடிய பொதுமக்களுக்கு பம்பர் அதிர்ஷ்ட குலுக்களை அறிவித்துள்ளது. இதில் எல்இடி டிவி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரங்கள் என பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படவுள்ளது. நவம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்த வரும் மக்கள் இந்த பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளைப் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.