தூத்துக்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளார் : ராகுல்காந்தி..!

Published by
Dinasuvadu desk
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்விவகாரத்தில் போலீஸ் மற்றும் அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் கண்டணம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் என ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 9 பேர் கொல்லப்பட்டது, அரசு ஸ்பான்ஸர் செய்யும் பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். அநீதிக்காக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது,” என ராகுல் காந்தி டுவிட்டரில் குறிப்பிட்டார்.
“தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” எனவும் குறிப்பிட்டார். தூத்துக்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல்காந்தி திட்டமிட்டு உள்ளார். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்ட பின், ராகுல் தூத்துக்குடி வருவார் என காங்கிரஸ் கட்சி  தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

33 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

1 hour ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago