நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு, கேரளா அரசு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் பல மாடிக் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதில் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு நாடுகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது.
இதனையடுத்து துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் அறிவித்துள்ளார். கடந்த வாரம் கேரளா மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதத்திற்கு சட்டசபையில் பதில் அளிக்கும் போது மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், துருக்கி மற்றும் சிரியாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்க கேரளா அரசு தயாராக உள்ளது எனக் கூறினார். இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு கேரள சட்டமன்றம் அஞ்சலி செலுத்துகிறது என்றும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம் என்று முதல்வர் மேலும் கூறினார்.
சிவகங்கை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இன்றும் நாளையும் மக்கள் நல திட்டங்கள்…
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின்…
சென்னை : நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கும் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி அசத்தலான அப்டேட்டுகளை…
சென்னை : வருமான வரித்துறை கடந்த சில நாட்களாகவே அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று ஒரே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்று…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ சமீபத்தில் இந்திய வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் குறிப்பாக, தேசிய அணிக்கு…