சுரங்க விபத்து: 14வது நாளாக தொடரும் மீட்புப் பணி! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Tunnel accident

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, கடந்த நவ.12ம் தேதி  தொழிலாளர்கள் சுரங்கபணிகள் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 14-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை தோண்டும் பணி நடந்து வருகிறது.

பாஜக வேட்பாளர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.. முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் கடும் விமர்சனம் !

மீட்பு பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக இயந்திரத்தில் மீண்டும் மீண்டும் கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதனை சரி செய்து, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் அங்குள்ளவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தற்போது கைகளால் துளையிட்டு தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணியின் போது ஆகர் இயந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு  ஏற்பட்டது காரணமாக இயந்திரத்திற்கு பதிலாக கைகளை கொண்டு துளையிட மீட்பு படையினர் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்… என்னென்ன ஆவணங்கள் தேவை?

குழாயில் இருந்து ஆகர் இயந்திரத்தை வெளியே எடுத்த பின் மனிதர்களை அனுப்பி துளையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகையில், முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்