வீட்டுப்பாடம் செய்யாததால் 2 மாணவர்களை அடித்த டியூஷன் ஆசிரியர்..! போலீசார் நடவடிக்கை
வீட்டுப்பாடம் செய்யாததால் 2 மாணவர்களை அடித்த டியூஷன் ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் இரு மாணவர்களை தாக்கியதாக பெண் டியூஷன் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தானேவில் பிவாண்டியின் கோகுல் நகர் பகுதியில் உள்ள டியூஷனுக்கு 10 மற்றும் 12 வயதுடைய சகோதரர்கள் சென்றுள்ளனர். அங்கு டியூஷன் ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் பதிலளிக்காத நிலையில், வீட்டுப்பாடம் ஏன் செய்யவில்லை என்று மாணவர்களை இருவரையும் அடித்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் டியூஷன் ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.