துக்ளக் லாக்டவுன், கடவுளை துதித்து பாடுதல், மணி அடித்தல் இவை தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் – ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா குறித்து நேற்று விமர்சித்திருந்த நிலையில், இன்று மத்திய அரசின் கொரோனா கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அனைத்து மக்களும் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வது இல்லை.
எனவே தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா குறித்து நேற்று விமர்சித்திருந்த நிலையில், இன்று மத்திய அரசின் கொரோனா கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக விமர்சித்துப் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கொரோனாவை கட்டுப்படுத்தும், முதல் நடவடிக்கை துக்ளக் லக்கடவுனை அமல்படுத்தியது. இரண்டாவது வழிமுறை மக்களை மணியடிக்க செய்தல், மூன்றாவது வழிமுறை கடவுளைத் துதித்துப் பாடுதல்’ என பதிவிட்டுள்ளார்.
केंद्र सरकार की कोविड रणनीति-
स्टेज 1- तुग़लक़ी लॉकडाउन लगाओ।
स्टेज 2- घंटी बजाओ।
स्टेज 3- प्रभु के गुण गाओ।
— Rahul Gandhi (@RahulGandhi) April 16, 2021