‘சுனாமி’ என்ற ஜப்பானிய சொல்லுக்கு “துறைமுக அலை’ என்று பொருள். மேலும் இது “ஆழிப் பேரலை’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த சுனாமி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த சுனாமி, 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி சரியாக காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோரதாண்டவம் ஆடியது.
சுனாமியின் இந்த கோரத் தாண்டவத்தினால் தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேஷியா நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சுனாமி உலகின் 11 நாடுகளில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இது, இந்த நுாற்றாண்டின் நான்காவது மிகப் பெரிய நிலநடுக்கம் ஆகும். சில நிமிடங்கள் நீடித்த கடல் கொந்தளிப்பு மிகப்பெரிய பேரழிவை இந்திய துணைக் கண்டத்தில் ஏற்படுத்தியது. இந்த சுனாமியால் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம், என்ற சோகமான சாதனையை பெற்றது. சுனாமியால் அதிகம் பாதிப்புக்குள்ளானது தமிழகம் தான்.
இதில், மிக அதிகமாக பாதிப்புக்குள்ளானது நாகப்பட்டினம் மாவட்டம் ஆகும். இந்தியாவில் மட்டும் 9571 பேரும், இந்தோனேஷியாவில் 94,100 பேரும், இலங்கையில் 30,196 பேரும், தாய்லாந்தில் 5,187 பேரும், மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் என இந்த கொடூரமான சுனாமிக்கு பலியாயினர்.
தமிழகத்தில், நாகபட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5819 பேரும், சென்னையில் 206 பேரும், கடலுாரில் 603 பேரும், காஞ்சிபுரத்தில் 124 பேரும் பலியாயினர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை இந்த சுனாமி தாக்கியது. இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் இறந்தனர். இதிலும் குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்படபல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…