வரலாற்றில் இன்று(26.12.2019).. சுனாமி இந்தியாவை தாக்கிய தினம்..

Default Image
  • சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னர்  இதே நாளில் தான் இந்திய பெருங் கடலில் ஏற்பட்ட சுனாமியின் நினைவலைகள், நம்முன் என்றும் நீங்காத வடுவாக ஆண்டுக்கு ஒருமுறை  தொடர்கிறது. 
  • இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

‘சுனாமி’ என்ற ஜப்பானிய  சொல்லுக்கு “துறைமுக அலை’ என்று பொருள். மேலும் இது “ஆழிப் பேரலை’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த சுனாமி இந்தோனேசியாவின்  சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் என்ற அளவில்  பூகம்பம் ஏற்பட்டது. இந்த சுனாமி, 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம்  26ம் தேதி சரியாக  காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோரதாண்டவம் ஆடியது.

Image result for tsunami 2004 date

சுனாமியின் இந்த கோரத் தாண்டவத்தினால் தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேஷியா நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பரிதாபமாக பலியாகினர்.  இந்த சுனாமி உலகின் 11 நாடுகளில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இது, இந்த நுாற்றாண்டின் நான்காவது மிகப் பெரிய நிலநடுக்கம் ஆகும்.  சில நிமிடங்கள் நீடித்த கடல் கொந்தளிப்பு மிகப்பெரிய பேரழிவை இந்திய துணைக் கண்டத்தில் ஏற்படுத்தியது. இந்த சுனாமியால்  2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம், என்ற சோகமான சாதனையை பெற்றது.  சுனாமியால் அதிகம் பாதிப்புக்குள்ளானது தமிழகம்  தான்.

Related image

இதில், மிக அதிகமாக  பாதிப்புக்குள்ளானது நாகப்பட்டினம் மாவட்டம் ஆகும். இந்தியாவில் மட்டும் 9571 பேரும், இந்தோனேஷியாவில் 94,100 பேரும், இலங்கையில் 30,196 பேரும், தாய்லாந்தில் 5,187 பேரும், மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் என இந்த கொடூரமான சுனாமிக்கு பலியாயினர்.

 

Related image

தமிழகத்தில்,  நாகபட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5819 பேரும், சென்னையில் 206 பேரும், கடலுாரில் 603 பேரும், காஞ்சிபுரத்தில் 124 பேரும் பலியாயினர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை இந்த  சுனாமி தாக்கியது. இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் இறந்தனர். இதிலும் குறிப்பாக  தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்படபல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)