ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் பல மணிநேரம் விசாரணைக்கு பிறகு கடந்த புதன்கிழமை ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைதுக்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் வழங்கினார்.
இதன்பின், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சம்பாய் சோரன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்த சூழலில், ஜாா்க்கண்டில் முதல்வா் சம்பாய் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு மீது சட்டப்பேரவையில் பிப்.5ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்யப்பட்டது.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா!
இதனால் முன்னெச்சரிக்கையாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 38 முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் ஒன்றாக விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசின் எம்எல்ஏ-க்கள் ராஞ்சியில் இருந்து ஹைதராபாதுக்கு 2 விமானங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால், இந்த எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க மாநில எதிா்க்கட்சியான பாஜக முயற்சி செய்யும் என்பதனால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு அனுமதி வழங்கி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…