#பக்தர்கள் உஷார் – தேவஸ்தானம் அறிவிப்பு
ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாகவும் பக்தர்கள் உஷாராக இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதள முன்பதிவு மூலமாக பக்தர்களுக்கு அளித்து வருகிறது. மேலும் இதற்காகவே tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. இதில் தரிசன டிக்கெட் வாடகை அறைகள் போன்ற சேவைகளையும் தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளதாக தெரிவித்த தேவஸ்தான கண்காணிப்பு அலுவலர்கள் 20க்கும் மேற்பட்ட போலி இணையதளங்களை கண்டறிந்தனர்.
இந்த போலி இணையதளங்கள் குறித்து திருப்பதி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும். போலி இணையதள செயல்பாட்டாளர்கள் மீது குற்றவியல் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளதாகவும் பக்தர்கள் தேவஸ்தானத்திற்குரிய இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.