மோடி சிறந்த மனிதர்.! அவர் நல்லவர்.! – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்.!
உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் அதனை தடுக்க பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்குதடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில், மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பு மருந்தாக கொடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது.
இந்த மருந்தை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என பரிந்துரை செய்தது. இந்த ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 70 சதவீதம் உற்பத்தி செய்வது இந்தியாதான். அதனால் பல்வேறு நாடுகளும் இந்த மருந்தை கேட்டுவந்தன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியிடம் ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை கேட்டார். அடுத்து, அவர் இந்தியா அந்த மருந்தை தராவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அவர் பேசியிருந்தார். இது பலரது கண்டனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், இந்திய அரசானது அமெரிக்காவிற்கு 29 மில்லியன் டோஸ் அளவு ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை அனுப்பியது. இதனை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியொன்றில், இந்திய பிரதமர் மோடியிடம் ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை கேட்டோம். அவரும் உடனே அனுப்பிவைத்தார். அவர் கிரேட், அவர் ரியலி குட் என பிரதமர் மோடியை சிறந்த மனிதர் என்றும், நல்லவர் வேண்டும் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார். மேலும், தங்களிடம் தற்போது 20 மில்லியன் டோஸ் ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்து இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.