நிறைவுபெற்ற இந்திய பயணம் ! அமெரிக்காவிற்கு திரும்பிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.இந்த பயணத்தின் போது டிரம்ப் இந்தியாவுடன் ரூ.21 ஆயிரம் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று ட்ரம்ப் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு ராஷ்டிரபதி பவனில் விருந்தளித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவிற்கு வந்தார். நேற்று முன்தினம் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினர்.அன்று மாலை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இருவரும் தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.
பின்னர் நேற்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பிறகு டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே ஆலோசனை நடைபெற்றது.
இந்த இந்தியா ஆலோசனையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.இதை தொடர்ந்து தொழில்துறையினர் அமெரிக்காவில் முதலீடு செய்யவேண்டும் என தொழில்துறையினருடன் நடந்த கூட்டத்தில் பேசினார்.
இறுதியாக குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று ட்ரம்பிற்கு அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு ராஷ்டிரபதி பவனில் விருந்தளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025