இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபரின் இன்றைய நிகழ்ச்சிகள்… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்கும் டிரம்ப்..

ஐக்கிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், 2 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார். இதன் ஒருபகுதியாக இவர், இந்தியாவின் , குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்தார், இவரை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மோதிரா விளையாட்டு மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் டிரம்ப் சிறப்புரையாற்றினார். பின், ஆக்ரா சென்றார் டிரம்ப். அங்கு அவர், மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலின் சுற்றிப்பார்த்தனர். பின், நேற்று இரவு டெல்லி வருகை தந்தார் .
டிரம்பின் இன்றைய நிகழ்ச்சிகள்:
- இந்நிலையில், இன்று காலை சரியாக 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப்புக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
- பின், காலை 10.30 மணிக்கு ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
- இதன்பின்னர் பகல் 12 மணியளவில் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. சுமார் ரூ21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.
- மேலும் டிரம்ப் மனைவி மெலானியா. டெல்லி நானக்புராவில் அரசு பள்ளிகளையும் பார்வையிடுகிறார்.
- பின் இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டிரம்ப் சந்தித்து பேசுகிறார். ஜனாதிபதி அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்கும் டிரம்ப், இரவு 10 மணியளவில் அமெரிக்காவுக்கு திரும்புகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025