மேற்கு வங்கத்தில் சரக்கு கப்பலில் இருந்து கவிழ்ந்த லாரிகள் – 2 பேர் மாயம்!

Default Image

மேற்கு வங்கத்தில் சரக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் அதிலிருந்த இருவர் காணாமல் போயுள்ளனர், அவர்களை தேடும் பனி தீவிரமடைந்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் உள்ள மல்டா எனும் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை 8 பேருடன் சரக்கு கப்பல் 9 கல் நிறைந்த லாரிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. லாரிகளை மணிக்க காட்டில் இறக்கும் பொழுது கப்பல் இன்ஜினில் ஏற்பட்ட மாற்றத்தால் கப்பல் சரிந்து லாரிகள் முழுவதும் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் எட்டு லாரிகளுடன், லாரியில் இருந்த 8 பேரும் நீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் இரண்டு பேர் இந்த விபத்திற்கு பிறகு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்திர மெண்டால் எனும் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ஜார்கண்டை சேர்ந்த கப்பல் ஆப்பரேட்டரால் இயக்கப்படக்கூடிய கப்பலிலிருந்து மணிக்க காட்டிற்கு வரும் பொழுது சில கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தால் கல் நிறைந்த லாரிகள் கங்கை நதிக்குள் விழுந்ததாகவும், இதில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு பேரை காணவில்லை எனவும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்