தக்காளியுடன் வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி.! கேரள போலீசாரிடம் சிக்கிய 2 பேர் .!
தக்காளியுடன் வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி வாளையார் பகுதியில் கேரள பேர் சிக்கி 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலிக்கு தக்காளிகளை கொண்ட பெட்டிகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது . அதனையடுத்து லாரி பாலக்காட்டின் வாளையாரில் வந்த போது , நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லாரியையும் நிறுத்தி சோதனை செய்தனர் .
அப்போது லாரிக்குள் இருந்த தக்காளி பெட்டிகளுக்கு இடையே 35 அட்டைப்பெட்டிகளில் வெடிப் பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த லாரியிலுள்ள அட்டைப் பெட்டிகளில் இருந்து 7,500 டெட்டனேட்டர்கள் மற்றும் 7,000 ஜெல்லட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டு லாரியின் உரிமையாளரான பிரபு மற்றும் அவர் உடனிருந்த ரவி ஆகிய இரு நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக வாளையார் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வெடிப்பொருட்கள் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பல குவாரிகளில் ஒன்றில் பயன்படுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
35 boxes containing 7000 gelatin sticks and 7500 detonators caught by @TheKeralaPolice while being smuggled in a truck carrying tomatoes from Salem to Aluva. pic.twitter.com/Bpo9bUGpAm
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) November 15, 2020