மகாராஷ்டிரத்தின் மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் முன்னே சென்ற இரு கார்கள் மற்றும் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்த ஒரு காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் மற்றொரு காரில் இருந்த ஒருவர் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மற்ற காரில் இருந்தவர்கள் மற்றும் லாரியில் இருந்தவர்கள் என 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நவி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வரக்கூடிய ஒருவர் தனது குடும்பத்தினருடன் புனேவில் இருந்து நவி மும்பைக்கு செல்லும் பொழுது ஏற்பட்ட இந்த விபத்தில் அவரது குடும்பத்தினர் நான்கு பேரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மற்றொரு காரில் இருந்த தம்பதிகளில் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் மகன் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…