பைக் மீது லாரி மோதி விபத்து: தாய், மகன் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழப்பு!
டெல்லி-மீரட் விரைவு சாலையில் 23 வயதுடைய விகாஸ் என்ற இளைஞன் தனது 47 வயதுடைய தாயார் முகேஷுடன் பைக்கில் முசாபர்நகரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தாய்-மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து பேசிய மசூரி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ரவீந்திர சந்த் பந்த் கூறுகையில், விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாக கூறினார்.
போலீசார் லாரியை பறிமுதல் செய்ததாகவும், விபத்து நடந்தபின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் டிரைவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது, தாய்-மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.