10 ஆண்டுகள் சிறை… புதிய வாகன சட்டம் அமல்.! லாரி ஓட்டுனர்கள் போராட்டம்.!

Hit and Run Case - Drivers Protest

அண்மையில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு புதிய சட்டங்கள் மசோதாக்கள் இதில் குறிப்பாக மூன்று வாகன சட்டங்கள் அமலாக்கப்பட்டன. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.

குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட மசோதாக்கள் சட்டமாகியுள்ளன. அதன் அடிப்படையில் குற்ற செயல்களுக்கான சம்பவத்திற்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாலையில் விபத்துகளை ஏற்படுத்தி விட்டு தப்பித்து ஓடும் டிரைவர்களுக்கு விபத்தின் வீரியத்திற்கு தகுந்தார் போல் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் 7 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூர்: புத்தாண்டில் மீண்டும் வெடித்த கலவரம் – 4 பேர் உயிரிழப்பு!

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்னர் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் குற்றத்திற்கான அதிகபட்ச சிறகு தண்டனை மூன்று ஆண்டுகள் என்றுதான் இருந்திருந்தது. அந்த சிறை தண்டனை தற்போது 10 ஆண்டுகளாக மாறி உள்ளது. இதற்கு கனரக வாகனங்கள், லாரி, பஸ் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே ஹரியானாவில் பஸ் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேற்கு வங்கத்திலும் டிரக் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து ஏற்பட்டு விட்டால் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்யலாம் என்று டிரைவர்கள் இறங்கினாலும், சுற்றி உள்ளவர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாகவே ஓட்டுனர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.  வேண்டுமென்றே யாரும் விபத்து ஏற்படுத்துவது இல்லை என தங்கள் தரப்பு வாதத்தையும் போராட்டக்காரர்கள் முன்வைத்து வருகின்றனர்.

அதேபோல, மகாராஷ்டிராவிலும் லாரி ஓட்டுனர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவி  மும்பையில் பெங்களூரு – மும்பை  சாலையில் குறைந்தது 400 பேர் போராட்டத்தில் நடத்தினார். அதேபோல ராய்கார்ட் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக  பெட்ரோல் பம்புகளில் அதிக கூட்டம் நிரம்பி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் முற்றிலுமாக எரிபொருள் நிறுத்தம் செய்யப்படும். இந்த போராட்டத்தின் போது போலீசார் மீது மோதலும் நடைபெற்றது. இதில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். இதுவரை நவி மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kaliyammal seeman
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon
Madras High court - Isha Yoga centre
india vs pakistan - shreyas iyer