போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங் ஊழல் வழக்கில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சா ஆராய்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் வினய் திரிபாதியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலியான டி.ஆர்.பி. ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெறுவதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த மிகப்பெரிய ஊழல் வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தது இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் சார்பாக இயங்கிவரும் ஹன்சா சர்வீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம். இந்நிறுவனம் டிஆர்பி ரேட்டிங்கில் தவறு நடப்பதாக மும்பை சைபர் கிரைமில் புகார் கொடுக்க, விசாரணையைத் தொடங்கியது மும்பை போலீஸ் தற்பொழுது வரை ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த வினய் திரிபாதி தான் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் சில சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஊழியர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். திரிபாதியுடன் சேர்த்து விஷால் பண்டாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபாதி இந்த ஊழலை நிகழ்த்த பண்டாரி மூலமாக தான் பாரோமீட்டர்கள் நிறுவப்பட்ட வீடுகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸ் கூறினார்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…