#TRP ‘scam’: டி.ஆர்.பி “ஊழல்” வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உத்தரபிரதேசத்தில் கைது..!

Default Image

போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங் ஊழல் வழக்கில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சா ஆராய்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் வினய் திரிபாதியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலியான டி.ஆர்.பி. ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெறுவதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மற்றும்  ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த மிகப்பெரிய ஊழல் வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தது இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் சார்பாக இயங்கிவரும் ஹன்சா சர்வீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம். இந்நிறுவனம் டிஆர்பி ரேட்டிங்கில் தவறு நடப்பதாக மும்பை சைபர் கிரைமில் புகார் கொடுக்க, விசாரணையைத் தொடங்கியது மும்பை போலீஸ் தற்பொழுது  வரை ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த வினய் திரிபாதி தான் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் சில சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும்  அவர்களது ஊழியர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். திரிபாதியுடன் சேர்த்து விஷால் பண்டாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபாதி இந்த ஊழலை நிகழ்த்த பண்டாரி மூலமாக தான் பாரோமீட்டர்கள் நிறுவப்பட்ட வீடுகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸ் கூறினார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்