திரிபுரா:மழை வேண்டும் என்பதற்காக தவளைகளுக்கு திருமணம்..!வைரலாகும் வீடியோ..!

திரிபுரா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராம மக்கள்,மழை வேண்டும் என்பதற்காக இரண்டு தவளைகளுக்கு ஆடை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சமயத்தில் திரிபுராவில் உள்ள மேற்கு பகுதியைச் சேர்ந்த பழங்குடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து சமீபத்தில்,மழை வேண்டும் என்பதற்காக இரண்டு தவளைகளுக்கு ஆடம்பரமாக ஆடை அணிவித்து அவர்களின் பாரம்பரிய முறைப்படி மாலைகளை பரிமாற விட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
#Watch| Frogs married off in Tripura to please rain god
Two toads were married performing all the rituals from bath in pond or river to new dresses, exchange of garlands, and applying of vermilion (sindoor). pic.twitter.com/qObo5i4qmM
— ANI (@ANI) May 6, 2021
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, மழையின் கடவுளான இந்திரனை திருப்திப்படுத்துவதற்காகவும்,நல்ல மழைப்பொழிவு வேண்டும் என்பதற்காகவும் ‘பேங்கர் பயே’ என்ற இந்த விழாவில் தவளைகளை திருமணம் செய்து வைத்து தேயிலைத் தோட்டங்களை வறட்சியிலிருந்து பாதுகாப்பதற்காக திரிபுரா மக்கள் இவ்வாறு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025