மொட்டையடித்து பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த திரிபுரா எம்எஎல்ஏ…!
திரிபுரா எம்எஎல்ஏ ஆஷிஸ் தாஸ் மொட்டையடித்து பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பாஜகவில் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்தவர் தான் ஆசிஸ் தாஸ். திரிபுராவின் சுர்மா தொகுதி எம்எல்ஏவான ஆசிஸ் தற்பொழுது பாஜகவிலிருந்து விலகி உள்ளார். மேலும் இதற்காக தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு, இவர் பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசிஸ் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு அரசியல் ஏதாச்சதிகாரமும், குழப்பமும் தான் நிலவுவதாகவும், பாஜகவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளதாகவும், அதனால் தான் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி தான் எனவும், அவர் தான் சரியான தேர்வாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். தவறான பாஜகவின் ஆட்சியில் இருந்ததற்காக நான் தற்பொழுது தலைமுடியை எடுத்துக் கொண்டுள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்வேன் என தெரிவித்துள்ளார்.