2018ஆம் ஆண்டை விட இந்த முறை அதிக சீட்களை வெல்வோம் என திரிபுரா மாநில முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா வாக்களித்த பின்னர் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் தற்போது சட்டமன்ற பொதுதேர்தல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கி, இன்று காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர். அங்கு கடந்த முறை பாஜக 36 இடங்களை வென்று இருந்தது.
கூட்டணி : இம்முறை பாஜக பழங்குடியின அமைப்பான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) உடன்கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணுகிறது. இடதுசாரிகளும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அதே போல, நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
முதல்வர் நம்பிக்கை : இந்த தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கிய நிலையில், திரிபுரா முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா, அகர்தலா பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் காலையிலேயே வந்து வாக்கு அளித்து விட்டு சென்றார். அப்போது அவர் பேசுகையில், 2018ஆம் ஆண்டை விட தற்போது நாங்கள் (பாஜக) அதிக இடங்களை கைப்பற்றுவோம். எனவும்,
விமர்சனம் : மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் காங்கிரஸ் கூட்டணி பற்றி பேசுகையில், காங்கிரஸ் அவ்வளவு பலமாக இருந்தால் ஏன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறார்கள் நேரடியாக தனித்து களம் காணலாமே என குறிப்பிட்டு பேசியிருந்தார் திரிபுரா மாநில முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா .
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…