திரிபுரா – பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!

Default Image

திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் தேசிய தலைவர் ஜேபி நட்டா.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்:

tripuraec

திரிபுரா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுபோன்று, மேகாலயா மற்றும் நாகாலாந்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக முயற்சி:

bjpcongresscpm

கடந்த 25 ஆண்டுகளாக சிபிஎம் தலைமையிலான கூட்டணி ஆட்சி திரிபுராவில் நடந்து வந்த நிலையில், இதை முறியடித்து பாஜக வெற்றியை நிலைநாட்டியது. இந்த சமயத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆளும் பாஜக திரிபுராவில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மறுபக்கம் இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் கூட்டணி வைத்து தங்களுக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துக்கொண்டன. மேலும், திரிபுராவில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று மீண்டும் சிபிஎம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சி செய்து வருகிறது.

திரிபுராவில் மும்முனை போட்டி:

 tec

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பழங்குடியின மக்களுக்கு தனி மாநிலம் என்ற தேர்தல் வாக்குறுதியுடன் திப்ரா மோதா கட்சியும் களம் காண்கின்றனர். இதனால், திரிபுரா சட்டசபை தேர்தலை பொறுத்தவரைக்கும் பாஜக, சிபிஎம் தலைமையிலான கூட்டணி மற்றும் திப்ரா மோதா கட்சி என மும்முனை போட்டியாக உள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை:

திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது பாஜக. இன்று திரிபுரா செல்லும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான பல புதிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

bjpjpnadda

மோடி அரசு எப்போதும் வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சி பற்றியே சிந்திக்கிறது. அவரது பார்வை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மிக முக்கியமாக இளைஞர்களின் வளர்ச்சியாகும் என்று  கூறியுள்ளனர். இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர் நட்டா ஏற்கனவே திரிபுராவில் நடைபெற்ற இரண்டு ரத யாத்திரையில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்