திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்; ரூ.44 கோடி பறிமுதல்.!
திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ரூ.44 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வரும் பிப்-16 ஆம் தேதி திரிபுராவில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடைபெற்ற சோதனையில் ரூ. 44 கோடி மதிப்புள்ள ரொக்கம், போதைப்பொருள் மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கிடே கிரண்குமார் தினராவ் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவும், நியாயமான தேர்தலை நடத்தவும் மாநிலம் முழுவதும் போதுமான எண்ணிக்கையிலான படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட நாகாக்கள்( சிறப்பு காவல் படையினர்) அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அசாம் மற்றும் மிசோரம் எல்லைகளை சீல் வைத்துள்ளோம். இதுவரை 44 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்துள்ளோம். இதில் ரொக்கம், போதைப்பொருள், தங்கம் மற்றும் இலவசங்கள் அடங்கும் என்று தினகரராவ் கூறினார்.
பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை பிரசாரத்துக்கு கடைசி நாள், தேர்தலை நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதே எங்கள் நோக்கம், இதற்காக போதுமான படைகள் அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.