Exit poll Result : திரிபுரா மற்றும் நாகாலாந்தை பாஜக தக்கவைக்கும் வெளியான கருத்துக்கணிப்பு

Default Image

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது.இதில் மேகாலயாவில் 77.55% வாக்குப்பதிவும் நாகாலாந்தில் 84% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டில்  திரிபுரா, மேகாலயம், நாகலாந்து, கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.இதில் திரிபுரா மாநிலத்தில் கடந்த 12ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பில் திரிபுராவில் பாஜக வெற்றி பெறும் என்றும், அதன் கூட்டணி அரசு நாகாலாந்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில்  திரிபுரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக 36-45 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் என்டிபிபி+ கூட்டணி 38-48 இடங்களைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடேகணித்துள்ளது.

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிக இடங்களைப் பெறும் என்றாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்