அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு!
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் நோமானி, நிக்காநாமா எனப்படும் முஸ்லிம்கள் திருமண ஒப்பந்தத்தில் “முத்தலாக் சொல்ல மாட்டேன்” என்ற உறுதி மொழி இடம்பெறுமாறு மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் ஒருவர் முத்தலாக் சொல்ல முடியாது என அவர் கூறினார்.
இது தொடர்பாக விவாதிக்க ஹைதராபாத்தில் வரும் 9ம் தேதியன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் முத்தலாக் மற்றும் வரதட்சணையை எதிர்த்து முஸ்லிம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.