திரிணாமுல் காங்கிரஸ் : மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் ரணகத் தக்ஷின், பாக்தா, ராய்கஞ்ச், மணிக்தலா ஆகிய 4 ட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது.
இன்று காலை 8 மணி முதல் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று முடிந்தது. அதன்படி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் தொகுதியில், கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் போட்டியாளரான மனாஸ் குமார் கோஷை வெற்றி பெற்றார். கல்யாணி 86,479 வாக்குகளும், கோஷ் 36,402 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தா சட்டமன்றத் தொகுதியில் டிஎம்சியின் ராஜ்யசபா எம்பியும், மட்டுவா தலைவருமான மம்தாபாலா தாக்கூரின் மகளும், டிஎம்சியின் மதுபர்ணா தாக்கூர், தனது போட்டியாளரான பாஜகவின் பினய் குமார் பிஸ்வாஸை விட 33,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுபர்ணா தாக்கூர் 1,07,706, பிஸ்வாஸ் 74,251 பெற்றனர்.
மேலும், பர்கானாஸில் உள்ள ரணகாட் தக்ஷினில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் பிஸ்வாஸை விட டிஎம்சியின் முகுத் மணி அதிகாரி 39,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொல்கத்தாவில் உள்ள மணிக்தலா தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் சுப்தி பாண்டே, பாஜகவின் கல்யாண் சௌபேயை விட 31,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…