திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து நீக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா மக்களவையில் தொழிலாலதிபர் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் அளித்திருந்தார்.

இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிா்லா பரிந்துரைத்தாா். அதன்படி, நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மகுவா மொய்த்ரா மீதான புகார் குறித்து விசாரணை நடத்திய நிலையில், அதுதொடர்பான விசாரணை குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, நெறிமுறைகள் குழு, மகுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கையை குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா தனது தரப்பை விளக்கப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல்..!

அந்த அறிக்கை இன்று பிற்பகல்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

நாடாளுமன்ற விதிகளை மீறி மாண்பை கலைக்கும் வகையில் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனவே,  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் நீக்கம் செய்யப்பட்டார். மகுவா மொத்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் மக்களவை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக மகுவா மொய்த்ரா கூறியதாவது, முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் ஒழுங்கு நடவடிக்கை குழு பதவியை நீக்க பரிந்துரை செய்துள்ளது. எம்பி பதவியை பறிக்க நெறிமுறைக் குழுவிற்கு அதிகாரம் இல்லை, இது பாஜகவுடைய முடிவின் ஆரம்பம் என்றார்.

Recent Posts

ED ரெய்டு… “யார் என்று தெரியவில்லை” வழக்கறிஞர்களுடன் துரைமுருகன் தீவிர ஆலோசனை?

சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…

49 minutes ago

Live : கோவை சமையல் எரிவாயு லாரி விபத்து முதல்… அமலாக்கத்துறை சோதனை வரை…

சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…

3 hours ago

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ! முக்கிய நபர்கள் அதிரடி கைது!

கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…

3 hours ago

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…

4 hours ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…

5 hours ago

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை!

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

6 hours ago