மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை.!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் அஹ்மத் அலி பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஹன்ஸ்காலி பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு வெளியே சென்றபோது, பைக்கில் வந்த இரு மர்ம நபர்களால் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.
அகமது அலி உயிரிழப்பு :
அகமது அலி பிஸ்வாஸ் சுடபட்ட உள்ளூர்வாசிகள் அவரை பகுலா கிராமின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
காவல்துறை வழக்குப்பதிவு :
தகவல் அறிந்த வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அகமது அலி பிஸ்வாஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக சக்திநகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஹன்ஸ்காலி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தடங்கப்பட்டுள்ளது .