மேகாலயா தேர்தல் : நல்ல மருத்துவமனை.. மருத்துவ கல்லூரி இல்லை.! ஊழல் மட்டும் இறுகிற்ற்து.! மம்தா குற்றசாட்டு.!

Default Image

மேகாலயா தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பேனர்ஜி பேசுகையில், மாநிலத்தில் உள்ள மருத்துவமனை வசதி குறித்தும், மருத்துவ கல்லூரி குறித்தும் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார். 

மூன்று மாநில சட்டசபை தேர்தலில் திரிபுரா தேர்தல் நிறைவடைந்துள்ளது. அடுத்து, மேகாலயா மற்றும் நாகலாந்து தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உளள்து. இதனை எதிர்கொள்ள பிரதான கட்சி தலைவர்கள் மும்முரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மம்தா பேனர்ஜி : மேகாலயா தேர்தலில் தனித்து களம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் தேசிய மக்கள் கட்சி பற்றி தனது விமர்சனத்தையும், பாஜக மீதான விமர்சனத்தையும் முன் வைத்தார்.

பிரச்சாரம் : அவர் கூறுகையில், வெளியில் இருந்து வரும் யாரையும், உங்கள் மீது குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ திணிக்க அனுமதிக்காதீர்கள் என குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை என்பதை பற்றியும், மேகாலயாவில் நல்ல மருத்துவமனையோ, மருத்துவ கல்லூரியோ இல்லை. ஆனால், ஊழல் மட்டும் இருக்கிறது. என்றும் மேகாலயா தேர்தல் பரப்புரையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்