மேற்கு வங்கம்: வாக்கு இயந்திரத்தில் பாஜக பெயர் பதித்த குறிப்புத்தாள் கட்டப்பட்டு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்தனர். அதற்கு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது .
நாடாளுமன்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஓர் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
இன்று, மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் ரகுநாத்பூர் பகுதி வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவுக்கு கொண்டுவரப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக பெயர் அதில் டேக் போல கட்டி வைக்கப்பட்டு இருந்தது என புகைப்படத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் பதிவிடுகையில், தேர்தல் பணியின் போது, வாக்கு இயந்திரத்தை சோதித்து பொதுவான ஓர் குறிச்சொற்களை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களால் கையொப்பமிட்டு வைப்பர். குறிப்பிட்ட வாக்கு இயந்திரங்களின் சோதனை நேரத்தில் பாஜக வேட்பாளரின் பிரதிநிதி மட்டுமே கமிஷன் ஹாலில் இருந்ததால், அந்த EVM மற்றும் VVPAT சோதிக்கும் போது அவரது கையெழுத்து பதிவாகியுள்ளது என மேற்கு வங்க தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…