வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி.
வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்றும் மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிக்கிமில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று பக்தோக்ராவில் நடைபெறுகிறது.
இன்று மதியம் 12:30 மணி முதல் 2 மணி வரை பாக்டோக்ரா விமான நிலைய தொழில்நுட்ப பகுதியில் விபத்தில் இறந்த 16 ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என இந்திய ராணுவம் கூறியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…