தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை!!
பிரதமர் நரேந்திர மோடி 75வது குடியரசு தின விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா இன்று இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அந்தந்த மாநில ஆளுநர்கள் மற்றும் தலைவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தலைநகர் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அப்போது, பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், மத்திய அமைச்சர்கள் இருந்தனர் இந்த ஆண்டு இன்டர் சர்வீசஸ் கார்டுக்கு இந்திய ராணுவ அதிகாரி மேஜர் இந்திரஜீத் சச்சின் தலைமை தாங்குகிறார்.
இந்திய குடியரசு தினம் விழா… பிரான்ஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்பு!
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மேக்ரோன் பங்கேற்பதன் மூலம், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்சை சேர்ந்த 6வது அதிபர் என்ற சிறப்பை பெறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினராக உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார்.