சந்தனமரம் கடத்தப்பட்டு அதனை அழிவுப்பதைக்கு கொண்டு சென்றுவிட்டு தற்போது மீண்டும் செம்மரத்தை அழிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கடத்தல் கும்பல்களுக்கு எத்தனை எங்கவுண்டர் நடந்தாலும் உரைக்காது போலும். ஏற்கனவே திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பலை காவல்துறையின சுட்டுக்கொன்றனர். எனினும் இந்த கடத்தல் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில், செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய கூடுதல் கமாண்டன்ட் ரவிசங்கர் உத்தரவின்படி ஆர்எஸ்ஐ வாசு, நரசிம்மராவ் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஸ்ரீகாளகஸ்தி மண்டலம் மேல்சூர் – வம்பப்பல்லி சாலையில் சென்றபோது பள்ளம் வனப்பகுதியில் சந்தேக படும்படியாக நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது அதில் 6 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதைனையடுத்து அந்த காரில் இருந்த காசிராம் பேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணி(31) என்பவரை பிடித்து விசாரித்தபோது வனப்பகுதியை ஒட்டியுள்ள தண்ணீர் குட்டையில் மேலும் 10 செம்மரக்கட்டைகள் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மொத்தம் 16 செம்மரக்கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இந்த செம்மரக்கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…