நீருக்குள் மறைத்து செம்மரம் கடத்தல்.. விகாரமாக யோசித்து சிக்கிய வினோத திருடர்கள்..

Default Image
  • செம்மரம் கடத்திய மர்ம கும்பலை மரணடி கொடுத்து மடக்கி பிடித்த காவல்துறை.
  • நீருக்குள் மறைத்து வைத்து விநோத கடத்தல்.

சந்தனமரம் கடத்தப்பட்டு அதனை அழிவுப்பதைக்கு கொண்டு சென்றுவிட்டு தற்போது மீண்டும் செம்மரத்தை அழிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கடத்தல் கும்பல்களுக்கு எத்தனை எங்கவுண்டர் நடந்தாலும் உரைக்காது போலும். ஏற்கனவே திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பலை  காவல்துறையின சுட்டுக்கொன்றனர். எனினும் இந்த கடத்தல் சம்பவங்கள் குறைந்த பாடில்லை.  இந்நிலையில், செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய கூடுதல் கமாண்டன்ட் ரவிசங்கர் உத்தரவின்படி ஆர்எஸ்ஐ வாசு, நரசிம்மராவ் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Image result for காளஹஸ்தி செம்மர கடத்தல்

அப்போது ஸ்ரீகாளகஸ்தி மண்டலம் மேல்சூர் – வம்பப்பல்லி சாலையில்  சென்றபோது பள்ளம் வனப்பகுதியில் சந்தேக படும்படியாக  நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது அதில் 6 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதைனையடுத்து அந்த  காரில் இருந்த  காசிராம் பேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணி(31) என்பவரை பிடித்து விசாரித்தபோது வனப்பகுதியை ஒட்டியுள்ள  தண்ணீர் குட்டையில் மேலும் 10 செம்மரக்கட்டைகள் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மொத்தம் 16 செம்மரக்கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர்  சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இந்த செம்மரக்கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel