தான் சிகிச்சை அளித்த குழந்தை உயிரிந்தால், உறவினர்களின் டார்ச்சர் தாங்காமல் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் உள்ள அனூப் ஆர்த்தோ மருத்துவமனையில் மருத்துவர் அனூப் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் புதூரை சேர்ந்த அபியா என்னும் 7 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை நடந்த சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்ற பின்பு அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் அனூப் கிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் கவனக் குறைவு தான் சிறுமி உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில அரசியல் பிரமுகர்களுடன் மருத்துவர் அனூப் கிருஷ்ணனை சிறுமியின் உறவினர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த மருத்துவர் வியாழக்கிழமை தனது கை நரம்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…