இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பயணிக்கும் பயணிகள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!
இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பயணிக்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் பயணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக சமீபத்தில் கொரோனா தொடர்பான பயண விதிகளை மாற்றியுள்ளது. அதில் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வருவதற்கு அனுமதித்துள்ளது. மேலும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்தியவர்களுக்கு அந்நாடு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து புதிய கொரோனா பயண விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில், இங்கிலாந்து, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி எடுத்தவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஃபைசர், மோடர்னா அல்லது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி (இங்கிலாந்திற்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாக பயணிகளுக்கு இறுதி டோஸ் இருக்க வேண்டும்) அல்லது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோஸ் ஆகியவை ஆகும். அதனால் இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தாமல் வேறு தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் தடுப்பூசி செலுத்தப்படாதவர்களாகவே கருதப்படுவர். அப்படி உள்ள இந்தியர்கள், இங்கிலாந்திற்கு செல்லும் முன் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
- இங்கிலாந்தில் தற்போது சிவப்பு, அம்பர் மற்றும் பச்சை பட்டியலில் நாடுகளைக் குறிக்கும் ஒரு அமைப்பு உள்ளது. மேலும் அம்பர் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
- இங்கிலாந்திற்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு நபர் ‘அம்பர் பட்டியல்’ நாட்டில் இருந்திருந்தால், அவர் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா வைரஸ் சோதனை எடுக்க வேண்டும்.
- புறப்படுவதற்கு முன் ஒரு பயணி எதிர்மறை கொரோனா சோதனை சான்று இல்லாமல் வந்தால், அவருக்கு அபராதமாக 500 பவுண்ட் விதிக்கப்படும். இங்கிலாந்து வந்த பிறகு, பயணி 2 வது நாளில் மீண்டும் கொரோனா சோதனை எடுக்க வேண்டும்.
- இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனெகாவின் அதே தடுப்பூசியான கோவிஷீல்ட் செலுத்திய இந்தியர்கள், இங்கிலாந்துக்குச் செல்வதற்கு 3 நாட்களுக்கு முன் கொரோனா சோதனை எடுக்க வேண்டும்.
- அவர்கள் இங்கிலாந்தில் எடுக்கப்படும் 2 ஆம் நாள் மற்றும் 8 ஆம் நாள் பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்து பணம் செலுத்த வேண்டும்.
- மேலும், அனைத்து இந்தியப் பயணிகளும் வீடுகளில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
- கொரோனாவுக்கு சோதனை சாதகமாக வந்தால், பயணியும் வீட்டாரும் சோதனை நாளிலிருந்து 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவர்களில் கொரோனா பயணிகளின் மாதிரிகள் மீதான சோதனைகள் மாறுபாட்டு வகை கொரோனாவாக இருந்தால், அவருடன் தொடர்புள்ள அனைவரும் சோதனை எடுக்கும்படி கேட்கப்படும்.
- இது தவிர, இந்தியப் பயணிகள் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்பு, அவர்களது பயணிகள் இருப்பிடப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- பச்சை பட்டியல் நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் இங்கிலாந்துக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா சோதனை எடுக்க வேண்டும்.
அக்டோபர் 4 முதல், நாடுகளில் ஒரே சிவப்பு பட்டியல் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளின் பயணத்திற்கு, பயணிகளின் தடுப்பூசி நிலையைப் பொறுத்து பயண விதிகள் அமையும்.