நிதிஷ் குமாருடன் பயணம்., விமானத்தில் நடந்தது என்ன.? தேஜஸ்வி பதில்.!
டெல்லி: மக்களவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது மாநில கட்சிகளிடம் தேசிய கட்சிகள் ஆதரவு கேட்கும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக நிதிஷ் குமார் (JDU), சந்திரபாபு நாயுடு (TDP) ஆகியோரின் ஆதரவை NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிகள் பெற முயற்சித்து வருகின்றன. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த சூழல் தான் இன்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் (I.N.D.I.A கூட்டணி) மற்றும் JDU தலைவர் நிதிஷ்குமார் (NDA கூட்டணி) ஆகியோர் ஒன்றாக பீகாரில் இருந்து விமானத்தில் பயணித்து டெல்லி வந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்விடம், I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா என்ற கேள்வியை செய்தியாளர்களிடம் கேட்டனர். அதற்கு. மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம். கொஞ்சம் பொறுமையாக இருந்து பாருங்கள் என கூறினார்.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உடன் ஒரே விமானத்தில் ஒன்றாக பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியானது குறித்த கேள்விக்கு , நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தினோம் என்று கூறினார். மேலும், அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க தொடர்ந்து பாருங்கள் என கூறிவிட்டு சென்றார்.
I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.