மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகினர்.
மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அதேபோல் அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழை நின்று விட்டது.
இன்று கேரள மாநிலத்தில் மழையின் தாக்கம் மீண்டும் இருக்கும் என்று இந்தியவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் கேரளாவில் திருச்சூர், பாலக்காடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…